Thursday, 15 April 2021


 காலக்கண்ணாடியும், மாயவிம்பங்களும்! 
 

சர்வதேச அரசியல் களத்தில் ஆதிக்கப் போட்டியில், விரிக்கப்பட்ட வலையில் சிக்கியது நாடுகள் மட்டுமல்ல நாடற்ற தமிழினமும்தான். சிங்களப் பேரினவாதப் பிடியில் இருந்து விடுதலை வேண்டி எழுச்சியுற்ற வீரத் தமிழினத்தின் தமிழீழ நிழல் அரசையும், அதன் விலைபோகாத் தலைமையையும் ஆதிக்கப்போட்டியாளர்கள் ஒன்றுபட்டு அழித்தொழித்தனர். வீணர்களின் ஆதிக்கப் போட்டியில் நசுக்கப்பட்டு அரசியல் அநாதைகளாக நீதிகேட்டு அலைகின்றது ஈழத்தமிழினம். தாயகத்தில் காணாமல் போன உறவுகளைத் தேடி அலைந்த உறவுகளில் 87 உறவுகள் நீதி கிடைக்காமலேயே இவ்வலகைவிட்டுச் சென்றுவிட்டனர். உள்ளூர் அரசியலால் தீர்க்கப்பட முடியாத விடயத்தை உலக அரசியலால் தீர்க்கப்படும் என நம்பி நிர்க்கதி நிலையில் காலம் கழிகின்றது. நமக்கென்றோரு மூலோபாயக் கொள்கையோடு, தந்திரோபாய அரசியல் நகர்வுகள் ஊடக வலுவான ராஜதந்திர யுக்திகளைக் கையாண்டு ஒன்றுபட்டுச் செயற்படல் காலத்தின் அவசியம். பந்தாடப்படும் இனமாக இல்லாமல் திருப்புமுனையை ஏற்படுத்த வல்ல வலுவான “களமாடும் சக்தி”யாக ஒன்றுபடும் தமிழினத்தால் மட்டுமே திகழமுடியும். - 
----   முகுந்தமுரளி

                        





சீனா - இலங்கை 

திகதிகள் இன்னமும் உறுதியாகவிடினும், இம்மாத இறுதியில் இலங்கைக்கு சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கே உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்.   இவ்வருகையின் போது சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பிரதமர் உட்பட முக்கிய அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார். இதேவேளை இலங்கை ஜனாதிபதியின் சீனப் பயணத்திற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஒன்றும் புதியதல்ல இருப்பினும் தற்சமயம் கவனத்திற்குரியதே! 

இந்தியா – இலங்கை                                                                         
                                            நேற்று முன்தினம் மிகவும் நெருங்கிய நட்பு நாடுகள் மத்தியில் கடல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பினை விருத்தி செய்யும் செயற்பாடுகளில் மற்றொரு படியாக இந்தியாவின்  ஐந்தாவது ராஐ;புத் வகை நாசகாரி ஐ.என்.எஸ் ரன்விஜய் கப்பலின் இலங்கை வருகை அமைகிறது. இலங்கை – இந்தியா ஆகிய நட்பு நாடுகள் மத்தியில் கடல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பினை விருத்தி செய்யும் செயற்பாடுகளில் மற்றொரு படியாக இக்கப்பலின்; வருகை அமைகின்றது என்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. ஆதிக்கப்போட்டியில் யாருடைய இராணுவம் இலங்கைத்தீவில் காலூன்றப்போகிறது என்பதை காத்திருந்துதான் கண்டு கொள்ளவேண்டும். 

இந்தியா – பாகிஸ்தான்                                                                                                 இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் “சாத்தியமில்லை” என்றாலும், இருநாடுகளிடையே உள்ள சிக்கல்களால் பதற்றம் மேலும் அதிகரித்தால் போர் மூளும் அபாயம் உள்ளது. இதேபோல் மூன்றாம் உலகப்போர் மூண்டுவிடுமோ எனும் அபாயக் கருத்துக்கள்  ஆய்வுகள் சர்வதேச ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகின்றன. 

ஏகாதிபத்தியத்தினுடைய உச்சாணிக் கொப்பிலே இருக்கும் அமெரிக்காவும் அதன் தலைமையின் கீழ் பங்காளிகளாக NATO நேட்டோ நாடுகள் (North Atlantic Treaty Organization) இருக்கின்றன. அத்தோடு  நாற்கால பாதுகாப்பு உரையாடல் (QSD குவாட் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது அமெரிக்கா, யப்பான், அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான ஒரு முறைசாரா மூலோபாய உரையாடலாகும், இது உறுப்பு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளால் பராமரிக்கப்படுகிறது. குவாட் கூட்டமைப்பின் முதல் உச்சி மாநாடு கடந்த திங்கள் கிழமை காணொளி வாயிலாக நடைபெற்றது. குவாட் உறுப்பு தலைவர்களுடன் கலந்துரையாடிய படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷின்டே சுகா ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசித்தனர். இந்நிலையில், குவாட் நாடுகளின் உச்சி மாநாடு நடப்பு ஆண்டு இறுதியில் மீண்டும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள்  நேரடியாக பங்கேற்று ஆலோசிப்பார்கள் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்தார். 


இதே நேரம் நேட்டோவின் செயலாளர் நாயகம் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 14, 2021) நேட்டோ தலைமையகத்திற்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டினை வரவேற்றார். அவரது தலைமை மற்றும் நேட்டோ கூட்டணிக்கான வலுவான அமெரிக்க அர்ப்பணிப்புக்கு திரு. ஸ்டோல்டென்பெர்க் நன்றி தெரிவித்து தொடர்ந்து  “நாங்கள் ஒன்றாகச் சென்றோம், நாங்கள் எங்கள் இருப்பை ஒன்றாக சரிசெய்தோம், நாங்கள் ஒன்றாக வெளியேறுவோம்"என்றார். ஆப்கானிஸ்தான் மீது இது நெருக்கமான ஆலோசனைகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

உக்ரைன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்தும், கியேவுக்கு(KYIV) (உக்ரைன் தலைநகர்) நேட்டோவின் ஆதரவு குறித்தும் விவாதிப்பதாக பொதுச்செயலாளர் கூறினார். நேட்டோ 2030 நிகழ்ச்சி நிரல் உட்பட செயலாளர் ஆஸ்டினுடன் வரவிருக்கும் நேட்டோ உச்சி மாநாட்டிற்கான தயாரிப்புகளையும் உரையாற்றுவதாக திரு. ஸ்டோல்டன்பெர்க் கூறினார். 

இந்தோ பசுபிக் பிராந்திய ஆதிக்கப்போட்டியில் அமெரிக்காவைப் பொறுத்தவரை சீனா ஒரு முதன்மையான போட்டியாளராக விளங்குகிறது. மேற்குலகின் ஏகாதியபத்தியத்திற்கு பெரும் சவாலாக கிழக்கின் ஏகாதிபத்தியத்தை கட்டி எழுப்பக் கங்கணம் கட்டிப் “பட்டுப்பாதை” அமைக்க முயலும் சீனாவே அமெரிக்காவின் முதன்மை எதிரி என்றால் மிகையாகாது . பல அரங்கங்களில் அமெரிக்காவை சவால் விடுத்து சீனா தனது வலிமையை நிரூபிக்கவும், பிராந்திய அண்டை நாடுகளை சீனாவின்  விருப்பங்களை ஏற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தவும் ஒருங்கிணைந்த, முழு அரசாங்க கருவிகளையும் பயன்படுத்த முற்படுகிறது.

இந்தியா கடந்த சில ஆண்டுகளில், அமெரிக்காவுடன் கூட்டாளராக உள்ள வரலாற்று தயக்கங்களை இறுதியாக வென்றுள்ளது. டெல்லி ஐரோப்பிய சக்திகளை, குறிப்பாக பிரான்ஸை ஈர்க்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. பிரதம மந்திரி போரிஸ் ஜான்சனின் இந்த மாத இறுதியில் டெல்லி வருகை பிரிட்டனுடனான இந்தியாவின் கடினமான பிந்தைய காலனித்துவ உறவுகளில் ஒரு புதிய தொடக்கத்தை உறுதியளிக்கிறது. ஜப்பான், கொரியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற ஆசிய நடுத்தர சக்திகளுடன் இந்தியா தனது உறவுகளை விரிவுபடுத்துகிறது. இந்தியா – ரஷ்யாவுடனான உறவும் சீராகவே பேணப்பட்டு வருகின்ற அதேவேளை ரஷ்யா-சீனா உறவில் விரிசல்கள் ஆரம்பமாகின்றன. “சீனாவுக்கு எதிராக அமெரிக்கா - இந்தியாக் கூட்டுடன் ரஷ்யா இணையுமா அல்லது சீனாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையில் ஒரு புதிய சமநிலையை நாடுமா? ” என்பதே பதிலில்லாக் கேள்வியாகிறது. 

முக்கோண இயக்கவியல் நாடுகளான சீனா இந்தியா ரஷ்யா மூன்றினையும் கூட்டுச்சேரவிடாமல் தடுப்பதன் மூலம் மேற்கினுடைய உச்சநிலை ஏகாதிபத்தியத்தை தக்கவைத்துக் கொள்ள மேற்குலக சக்திகள் நிகழ்ச்சிநிரல் அமைத்துச் செயல்படுகின்றன என்பதையே காலக்கண்ணாடி காட்டும் மாயக்கோலங்கள் எடுத்தியம்புகின்றன. 


No comments:

      முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர்..!             முகுந்தமுரளி உலகப் பொதுப் புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். 1.1....