Friday, 19 March 2021

 மாய மானும்! கானல் நீரும்! முகுந்தமுரளி 

தமிழினத்துக்கு ஒரு தலைமை இருந்தது மூன்று தசாப்தம் தமிழினம் தலைநிமிர்ந்து நின்றது. அந்த காலசந்தர்ப்பத்தை இந்த இனம் பயன்படுத்தவோ பங்காளராகவோ பயணிக்க தவறிவிட்டது. நேரடி பங்காளராக அரைப்பங்கினராவது கைகோர்த்திருப்பின் இலக்கினை எட்டியிருப்பம்.  அண்ணை சொன்னவை “நாம் பலத்துடன் இருக்கும் போதுதான் எம்மை மதிப்பார்கள் நாம் சொல்வதை உலகம் செவிசாய்க்கும்;.” எனி எந்த நாயும் எமக்கு இரங்காது அரசியல் பம்மாத்து உலகநாடுகளின் தன்நலம் இவைகள்தான் மேலோங்கும் எல்லாமே முடிந்துவிட்டது. எனி ஒரு அண்ணன் தோன்றினால் மட்டுமே விடிவு. 

லண்டன் போராட்டம் முடிந்து அறிக்கைகள் வந்தவுடன் தாயகத்திலிருந்து ஓர் உறவு அனுப்பிய மடல்; இவ்வாறு வேதனையை வெளிப்படுத்துகின்றது. இரண்டு பிள்ளைகளை மாவீரர்களாகக் கொடுத்து தானும் பங்களிப்புச் செய்து இன்றும் இயலாத காலோடும் தளராத நம்பிக்கையைப் புலம்பெயர் தமிழர்கள் மேல் வைத்த அந்த உள்ளம் நொந்து எழுதிய வரிகளே இவை. 

இவ்வுலக வரலாற்றில் மனித உரிமை சபையால் எங்காவது ஒரு அரசியல் தீர்வு கிடைத்துள்ளதா? எங்களுக்கான தீர்வு போர்க்குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பதா அல்லது தமிழ் மக்ககளுக்கான விடியலைத் தரும் நிரந்தர அரசியல் தீர்வா? மனித உரிமைகள் எனும் மண்குதிரையை நம்பி நாங்கள் இன்னும் எத்தனை நாள்தான் சவாரி செய்யப் போகின்றோம்? இன்று பொதுச் சபையிலுள்ள இலங்கைப் பிரச்சனை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்குச் செல்லுமா? ஐஊஊ க்கு பரிந்துரைக்கப்படுமா? ஐஊது க்கு செல்வதற்கு வாய்ப்புள்ளதா? உரோமச் சட்டத்தில் கையொப்பமிடாத இலங்கையை ஐஊஊ க்குப் பரிந்துரைக்க ஏதாவது ஒரு நாடேனும் தயாராகவுள்ளதா? ஐஐஐஆ எனும் பொறிமுறை என்ன விதமான முடிவைத்தரும்  என வாதவிவாதங்கள் சூடுபிடித்து நிற்கின்றது. 

மூவமைப்புக்களும், முயற்சிகளும்

“நாங்கள் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்பதை மறுதலிக்கவில்லை ஆனால் நாங்கள் பொதுப்படையாக அரசியற்; செயற்திட்டங்களுக்கு மனித உரிமை விவகாரத்தைப் பயன்படுத்துகின்றோம். அதனூடகத்தான் சர்வதேச அரங்கில் தமிழ்மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகின்றோம்  என அண்மையில் கனடியத் தமிழ் காங்கிரசைச் (ஊவுஊ) சேர்ந்த டான்ரன் அவர்கள் தொலைபேசியினூடாக ஓர் ஒருங்கிணைவுக்காகப் பேசிய பொழுது தெரிவித்தார்.” 

அதேபோல் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை, மே 18 இனப்படுகொலை நாளாகவே நினைவு கூரப்படல் வேண்டும் என உறுதிப்பட நின்று கனடாவில் அரசியல் வேலைத்திட்டங்களையும், ஐ.நா நோக்கிய வேலைத்திட்டங்களிலும் மற்றும் ராசதந்திர உறவுகளினூடான ரீதியான அரசியல்  செயல்திட்டங்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கனடிய தமிழர் தேசிய அவையினர் (Nஊஊவு) ஒரு திடமான கொள்கையுடன் பயணிக்கின்றனர். தமிழ் மக்களுக்கான பரிகார நீதியும், நிரந்தரமான அரசியல் தீர்வும் பெற்றெடுக்க வேண்டும் என உறுதியுடன் களமாடுகின்றனர். ஐக்கியத்திற்கான அழைப்புக் கொடுத்த பொழுது ஐக்கியத்தை விரும்பிச் செயற்பட சற்றும் தயங்காத இணக்கப்பாட்டைக் கொண்டிருந்தனர்.  

தமிழர்களுக்கான தீர்வு தமிழீழ அரசே என யாப்பில் உள்ளடக்கி, சர்வதேச விவகாரங்களுக்கான ஒரு வெளியுறவுக் கொள்கையை வகுத்து சனநாயக விழுமியங்களின் அடிப்படையில் ஓர் அரசாங்கமாக நிமிர்ந்து செயற்படுவது நாடு கடந்த தமிழீழ அரசாங்கமாகும் (வுபுவுநு). ஓர் அரசாங்கம் எனும் அடிப்படையில் பொதுவெளியில் தமது ராசதந்திர நகர்வுகளை வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், பொது மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டிய விடயங்கள் அனைத்தும் முறையாக ஊடக அறிக்கைகள் மூலமாகவோ அல்லது நாடுகடந்த தமிழீழ அரசவையின் அதற்குரிய உறுப்பினர்கள் மூலமாகவோ வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. நாடுகடந்த தமிழீழ அரசானது ஐக்கியத்திற்கான கதவுகளை தாராளமாகத் திறந்து வைத்திருப்பதும் கண்கூடு. 

இவ்வாறு மூன்று அமைப்புக்களும் தங்கள் தங்கள் கொள்கை வழி தமது அரசியல் வேலைத் திட்டங்களை செய்து கொண்டு இருக்கும் பொழுதும் இவர்கள் மேல் குற்றங்கள் குறைகளைக் கூறிக்கொண்டு இருக்கும் நான்காவது விமர்சனத் தரப்புக்களும் காணப்படுதல் சனநாயகப் பெருவெளியில் தவிர்க்க முடியாதவொன்றே! 

அதற்கும் அப்பால் தார்மீக அல்லது அரசியல் தாற்பரியங்களோ , இராசதந்திர நகர்வுகளோ என்னவென்று தெரியாத அல்லது அவற்றைப் புரிந்துகொள்ள முடியாத மற்றுமோர் தரப்புக்களும் சமூகத்தில் இறங்கி குழப்பங்களை விளைவித்த வண்ணம் உள்ளனர். அறவடித்த முன்சோறாகத் தன்னார்வச் செயற்பாட்டளார்கள் பலிக்கடாவாகின்றனர். இவர்கள் தான்தோன்றித்தனமான நடவடிக்கைளிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடுகின்றார்கள். இவர்களிடம் தொலைநோக்குப் பார்வையுமில்லை. தெளிந்த சிந்தனையுமில்லை. ஆழ்ந்த அரசியல் ஞானமும் இல்லை. உரிய வழிகாட்டி இல்லாத இவர்கள் நிலை தலையில்லாத கோழியின் கதையே. மிஞ்சி மிஞ்சிப்போனால் தலையில்லாத கோழி 18 மாதங்கள் மட்டுமே வாழ்ந்ததாக  உலக வரலாறு கூறுகின்றது.  இத்தகையவர்களினால் நடத்தப்படும் “அரசியல் விளைவை மதிப்பிடாத” போராட்டங்கள் தவறானவையே. அதேவேளை இவர்களை ஆதரிப்பதுபோலவே தங்களை இனங்காட்டிக் கொண்டு பலவழிகளில் உதவி, நிதியுதவி  செய்து மறைந்திருந்து விளையாடும் இலங்கை முகவர்களுக்கும், தேசியத்தை முற்படுத்தி புகழ்; பொருள்; சம்பாதிக்க முற்படும் தனிநபர்களுக்குமே இப்போராட்டங்கள் ஆதாயம் தருபவையாக அமைகின்றன! குறிப்பாக அமைப்புகளில் பொறுப்புக்களில் இருந்து கொண்டு பொறுப்பற்ற தனமாக நடக்கும் தான்தோன்றித்தனத்தைக் கைவிடவேண்டும். அமைப்பிலுள்ளவர்கள்  வார்த்தைகளிலும், செயல்களிலும் மிக அவதானமாக இருக்கவேண்டும்.  அல்லாவிட்டால் அவர்கள் சார்ந்த அமைப்புக்களின் பெயரே கெடும். அல்லது அமைப்பாவது இவர்கள் மேல் ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும்.  

UNHRC  பொறிமுறையை நோக்கிய போராட்ட "மாயமானி"ன்  பின்னால்  ஒடும் இத்தகையை தலையில்லாத கோழிகளின் போராட்டங்கள் தமிழிரின் தாகத்திற்கு "கானல் நீரையே"
தீர்வாகக் காட்டி வரலாறுபடைக்கும். எதிரிகள் விரிக்கும் சூழ்ச்சி வலை நிகழ்ச்சி நிரல்களுக்குள் வீழ்ந்து எதிரிகளுக்கே ஆதாயத்தைப் பெற்றுக் கொடுக்கும் என்பதே காலத்தின் பதிலாக அமைகின்றது. இப்பொருட்படவே அரசியல் ஆய்வாளர்கள் பலர் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.   சட்டைப்பைகளை நிரப்புகின்ற அரசியல்வாதிகளும், புகழ் விரும்புகின்ற செயற்பாட்டாளர்களும் இருக்கும் வரை தமிழர்களின் தலையெழுத்து யாராலும் மாற்ற முடியாத ஒன்றாகவே இருக்கும்! பசுக்கள் சுரக்கும் பால் யாரோ ஒருவர்க்குச் சொந்தமாவது போல் போராட முன்வரும் மக்களின் எழுச்சிகள் தனைத் தங்கள் சுயநலத் தேவைகளுக்காகப் பயன்படுத்தும் தேர்தல் அரசியல்வாதிகளையே தாயகத்தில் காணக்கிடைக்கிறது. 


ஒரு கையில் உள்ள ஐ.நா. மனித உரிமைகளின் சட்டதிட்டங்களைக் கொண்டு  அடக்கமுடியாதவர்களை அடக்கவென மறு கையில் இராணுவ பலத்தையே கையில் வைத்திருப்பதே மேற்குலக ராசதந்திரம் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். நாம் பலமாக இருந்தால்தான் உலகம் நம்மை மதிக்கும். எங்கள் பலத்தை வலுப்படுத்தும் வகையில் எங்கள் போராட்டங்களை, செயல்களை சுயபரிசீலனை செய்ய வேண்டும்.  








No comments:

      முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர்..!             முகுந்தமுரளி உலகப் பொதுப் புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். 1.1....