Saturday, 2 January 2021

 


உச்ச நீதி கோரும் தமிழீழ தர்மமும்!                               உணர்வற்ற தமிழர்களின் கையறு நிலையும்! 

முகுந்தமுரளி

ஒன்ராறியோ மற்றும் கனடாவில் “தமிழ் இனப்படுகொலை நாள் மற்றும் ஒன்ராறியோ இனப்படுகொலை கல்வி மசோதாவை” நிராகரிக்க கோரிய  சிறீலங்கன்-கனடியன் அதிரடிக் கூட்டணியின் ஊhயபெந.ழசப ஊடான விண்ணப்பத்தில்; 23,684ற்கும் மேல் கையெழுத்திட்டுள்ளார்கள். அதேவேளை தமிழினப்படுகொலை நினைவகத்தால்;  “தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் இனப்படுகொலையை கனடா அரசு அதிகாரப்பூர்வமாக  அங்கீகரிக்கக்கோரும் விண்ணப்பம்” கடந்த ஆறுமாத காலங்களில் திரட்டிய கையெழுத்துக்கள் வெறும் 3,651. நெடுமொழிபேசுபவர்கள் கையறு நிலையை காட்டுகின்றது.  


         அரசியல்வாதிகளையும், அமைப்புக்களையும் குற்றங்கூறு வதும் மற்றும் வெறும் அரசியல் விமர்சனங்களையும் ஊடகங்களில் முன்வைப்பதும் மட்டும்தான் எமக்கான விடிவைப்பெற்றுத் தருமா? எங்கள் மேதாவித்தனங்களை மட்டும் காட்டுகின்ற களமாக ஊடகங்களை  நாம் அனைவரும் பயன்படுத்துகின்றோமா? மக்கள் இன்றும் இணைய-வழி ஒப்பமிடலை அறியாத அளவிற்கு கல்வி அறிவற்றவர்களாகவா இருக்கின்றார்கள்?  எங்கள் சந்ததிகள் இவ்விடயங்களில் அக்கறை காட்டாதவர்களாக எங்களால் வளர்க்கப்பட்டு விட்டார்களா? வெறும் வாய்ச்சொல் வீரர்களாக மட்டும் நாங்கள் அழிந்துபோகப் போகின்றமோ? அல்லது எம் மக்கள் ஒருவகை விரக்தி மனப்பான்மையில் இருக்கிறார்களா? பணமோசடி செய்தார்கள், தேசியச் சொத்தைப் பதுக்கிவிட்டார்கள் என்பவற்றை அதன் மெய், பொய் தெரியாமல் கண்டதும்; பக்குவமாகப் பகிர்வதும், பொறுப்பற்ற சில ஊடகங்களின் புரளி கிளப்பும் செய்திகளில் மூழ்கிப் போவதும் என்பன எம்மைத் திசை திருப்புகின்றது என்பது மட்டுமல்ல சர்வதேசம் காட்டுகின்ற பாதையிலேயே போராட்டம் எனும் பார்வையும்  எம்மைத் திசை திருப்புகின்றது. போர்க்குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அனுப்புவதனால் தமிழ் மக்கள் தேடும் தமிழ் மக்களிற்கான தீர்வு கிடைக்கப்போவதில்லை. தமிழர்களின் விடுதலை அரசியல் தலைவிதி என்பது தமிழ் மக்களின் கைகளிலேயே உள்ளது. இலங்கையில் ஏழு தசாப்தங்களுக்கு மேலாக இன அழிப்பிற்குளளாகிக்; கொண்டிருக்கும் தமிழ் மக்களிற்கான உச்சநீதி கிடைக்க “இலங்கையில் நடந்தது, நடப்பது தமிழ் இனப்படுகொலை என்பதை நிரூபிப்பதே தமிழர்கள் எம் தலையாய கடமையாகும்;.” - முகுந்தமுரளி


   
போலந்தில் குடியேறிய வழக்கறிஞர் ரபேல் லெம்கின் (1900-1958) 1944 இல் தனது Axis Rule in Occupied Europe என்ற நூலில்  முதன்முதலில் பாதையை உடைக்கும் ஆய்வில் “இனப்படுகொலை" என்ற வார்த்தையை உருவாக்கி சர்வதேச சட்டத்தின் ஒரு பொருளாக வரையறுத்தார். படுகொலையின் போது யூத மக்களை திட்டமிட்ட முறையில் கொலை செய்வதற்கான நாஜி கொள்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக லெம்கின் இந்த வார்த்தையை உருவாக்கியுள்ளார், அதேவேளை குறிப்பிட்ட நபர்களின் குழுக்களை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட இலக்கு நடவடிக்கைகளின் வரலாற்றில் முந்தைய நிகழ்வுகளுக்கும் பதிலளித்தார். பின்னர், ரபேல் லெம்கின் “இனப்படுகொலை” ஒரு சர்வதேச குற்றமாக அங்கீகரிக்கப்பட்டு குறியிடப்பட்ட பிரச்சாரத்தை வழிநடத்தியது. 

           இனப்படுகொலை என்பது பற்றிய பிரபலமான புரிதல் என்பது “சர்வதேச சட்டத்தின் கீழ் விதிமுறைகளின் உள்ளடக்கத்தை” விட பரந்ததாக இருக்கும். ஐ.நாவின் இனப்படுகொலை மாநாட்டின் இரண்டாம் பிரிவு இனப்படுகொலையின் குற்றத்திற்கு ஒரு குறுகிய வரையறையைக் கொண்டுள்ளது, இதில் இரண்டு முக்கிய கூறுகள் உள்ளன:

1. உள-இயல்  அடிப்படையில் : "ஒரு தேசிய இன அல்லது மதக் குழுவை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கம்"; மற்றும்

2. ஜட-இயல் அடிப்படையில் : பின்வரும் ஐந்து செயல்கள் கணக்கிடப்படுகின்றது.

 

குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது, 

குழுவின் உறுப்பினர்களுக்கு கடுமையான உடல் அல்லது மனநல பாதிப்பை ஏற்படுத்துதல்;,

முழு அல்லது பகுதியாக அதன் இருப்பை, உடல் அழிவை ஏற்படுத்த கணக்கிடப்பட்ட         வாழ்க்கையின் குழு நிலைமைகளை வேண்டுமென்றே ஏற்படுத்துதல்;.

குழுவிற்குள் பிறப்புகளைத் (இனப்பெருக்கத்தை) தடுக்கும் நோக்கில் நடவடிக்கைகளை திணித்தல். 

குழுவின் குழந்தைகளை வலுக்கட்டாயமாக வேறு குழுவுக்கு மாற்றுவது.

  இவ்வரையறைகள் படுகொலைகளைத் தீர்மானித்து வரையறுக்க மிகவும் கடினமானவை.  இனப்படுகொலையை உருவாக்க, ஒரு தேசிய இன அல்லது மதக் குழுவை உடல் ரீதியாக அழிக்க குற்றவாளிகளின் தரப்பில் ஒரு நிரூபிக்கப்பட்ட நோக்கம் இருக்க வேண்டும். கலாச்சார அழிவு போதுமானதாக மட்டுமின்றி, ஒரு குழுவை வெறுமனே சிதறடிக்கும் நோக்கமும் அன்றிய, சிறப்பு நோக்கம் அல்லது டோலஸ் ஸ்பெஷலிஸ் (னுழரடயள ளுpநஉயைடளை) தான் இனப்படுகொலையின் குற்றத்தை மிகவும் தனித்துவமாக்குகிறது.  

 Doulas Specialis டோலஸ் ஸ்பெஷலிஸை தெளிவுபடுத்துதல்: இனப்படுகொலை நோக்கம் பற்றிய ICTY நீதித்துறை பகுப்பாய்வு! 

இனப்படுகொலையின் குற்றத்தை விமர்சன ரீதியாக வரையறுப்பது டோலஸ் ஸ்பெஷலிஸ், ஒரு பாதுகாக்கப்பட்ட குழுவை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ அழிப்பதற்கான சிறப்பு நோக்கம். எவ்வாறாயினும், அழிப்பதற்கான இந்நோக்கத்தின் துல்லியமான பொருள் கல்வி விவாதத்திற்கு உட்பட்டது. முன்னாள் யூகோஸ்லாவியாவுக்கான (ICTY) சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் நீதித்துறை இனப்படுகொலை நோக்கத்தின் அர்த்தத்திற்கு அதிக தெளிவைக் கொண்டுவந்துள்ளதா என்பதை ஆராய்வதன் மூலம் இ குற்றவியல் சட்ட மன்றத்தில் (2015) ஜானின் நடால்யா கிளார்க்கின்  பகுப்பாய்வுக் கட்டுரை இம்முக்கியமான விவாதத்திற்கு பங்களிக்க முற்படுகிறது. மூன்று முக்கியமான விடயங்கள் தொடர்பாக தீர்ப்பாயத்தின் நீதித்துறையை பகுப்பாய்வு செய்வதன் மூலம் அது அவ்வாறு செய்கிறது: இனப்படுகொலை நோக்கத்திற்கான சான்றுகள் எது? திட்டமிடப்பட்ட இனப்படுகொலை நோக்கத்தை வரையறுத்து   எதிர்கொள்ள போதுமான காரணத்தோடு கூடிய அறிவு உள்ளதா? ஒரு குழுவை முழுவதுமாக அல்லது ‘பகுதியாக’ அழிப்பதன் அர்த்தம் என்ன? மூன்று முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இக்கட்டுரை, தீர்ப்பாயத்தின் நீதித்துறையை இந்த ஒவ்வொரு விடயத்தையும் ஆய்ந்தாராய்கிறது, இறுதியில் ஐ.சி.ரி.வையின் தீர்ப்புகள் இனப்படுகொலை நோக்கத்தின் தெளிவின்மைகளை தெளிவுபடுத்த உதவியுள்ளன என்ற முடிவுக்கு வருகிறது.



இனப்படுகொலைக்குரிய வரைவிலக்கணம் “ஒரு தேசத்தையோ அல்லது குழுவையோ அழிக்கும் நோக்கத்துடன் ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது இனத்தைச் சேர்ந்த ஏராளமான மக்களை வேண்டுமென்றே கொல்வது.” என்பதாகும்.  

                இன்றைய பதிவுகள்தான் நாளைய வரலாறுகள். 

புலம் பெயர்ந்த தேசத்திலுள்ள எமக்கு, “நமது சந்ததிக்கு மட்டுமல்ல கனடாவின் ஏனைய சமூகங்களும் நாம் ஏன் புலம் பெயர்ந்தோம் என்பதனை அறிந்து கொள்வதற்கான “ பில் 104 எனும் இனப்படுகொலைக்கான கல்வி வாரம்” எனும் சட்டவரைபு உருவாக்கம் ஓர் அரிய வாய்ப்பாகும்.”   காலகாலமாக திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டுக் கொண்டுவரும் ஒரு இனக்குழுமத்தின் வாழும் சாட்சியங்கள்கள் நாமாவோம். சொல்லாடல்களால் குழப்பங்களை உருவாக்கி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கமுயலும் வல்லாதிக்க சக்திகளின் நிகழ்ச்சிநிரல்களினால், “இலங்கையில் தமிழ் இனப்படுகொலைக்கு முகங்கொடுக்கும் குரலற்ற தமிழின மக்களுக்கான பாதுகாப்பும், நீதியும் வழங்க மறுக்கும் சர்வதேச சமூகம் மற்றும் ஊடகங்களின் மௌனத்தால் நாங்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம்.  நீண்ட பதினொரு ஆண்டுகள் கடந்துவிட்டன, நடந்தது தமிழ் இனப்படுகொலையே என அங்கீகரிக்க சர்வதேச சமூகத்தால் உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.”

“நடந்தேறியது தமிழ் இனப்படுகொலையே என்று அங்கீகரிக்க கனடா தார்மீக உயர்நிலையை எடுக்கவில்லை அல்லது புலம்பெயர் தமிழர்கள் பெரும்பான்மையானவர்கள் வதிவிடம் கனடா  என்ற போதிலும் அதை அங்கீகரிக்க தேவையான செயல்முறையை யாரும் எடுக்கவில்லை,  ஒன்றிணையவில்லை என்பது வருத்தமளிக்கிறது” என்று கூறுவது மட்டும் போதாது. மக்களாகிய நாம் என்ன செய்யப்போகின்றோம்?  வாய்மூடி நாம் இருந்தால், வரலாறு எம்மை மன்னிக்காது! நித்திரையா தமிழா? நீதி கேளடா?

Please Sign the (1) Petition · The Right Honorable Justin Trudeau, Prime Minister of Canada.: Canadian Government to officially recognize Sri Lanka’s Genocide against Tamils · Change.org

Petition (2)  Objection to Sri Lankan Government’s Nomination of Air Marshall Sumangala Dias as the High Commissioner for Canada. https://ctcja.com/



No comments:

      முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர்..!             முகுந்தமுரளி உலகப் பொதுப் புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். 1.1....