Saturday, 26 December 2020





 இனப்படுகொலைக் குற்றவாளிகளும் - இன்றும் 

இலங்கா மேல்பாயாத கனடாவின் மக்கன்சி சட்டமும்!

முகுந்தமுரளி

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த காலகட்டத்தில், வான்வழியாக குண்டுவீசி எம் மக்களைக் கொன்று குவித்தவன் இலங்கை விமானப்படைத் தளபதி சுமங்கல டயஸ் (Air Marshall Sumangala Dias).    . இப்போர்க் குற்றவாளியை ஒட்டாவாவில் உள்ள இலங்கைத்தூதரக அதிகாரியாக நியமித்த இலங்கை அரசு கனடா அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பித்து இருந்தது.    

கடந்த திங்கள் மதியம் கனடா அரசு அதன் மறுமொழியாக விண்ணப்பத்தை  நிராகரித்துவிட்டது  உத்தியோகப் பற்றற்ற தகவல் ஒன்று கூறுகின்றது

    மக்கள்சேவை புரிந்தவர் எனும் பொய்க்கோர்ப்புக்களைச் சேர்த்து, ஒரு புழுகுமூட்டையுடன் இங்கு விண்ணப்பத்தார்களாம். ஆனால் முள்ளிவாய்க்கால் சாம்பல் 

மேட்டின் புழுதி ஒட்டி இருந்து “கொட்டி” விட்டது. இந்தப்பாதகனின் செயல்கள் அனைத்தையும் ஆராய்ந்த கனடிய அரசு தன் கடமையைச் செய்து உள்ளது. இவ்விடத்தில் கனடா அரசு சரியாகத்தான் தன் கடமைகளைப் புரிகின்றது  என்ற ஒரு மாயக் கூற்றை முன்வைத்தால், அதற்கான பதில் என்ன?  

கனடா அரசின் செயல்முறைகளில் அதிருப்தியுடன் இருக்கும் புலம்பெயர் தேச தமிழ் சிந்தனையாளர்கள் மத்தியில் முன்வைத்த பொழுது, “ஊடகங்கள் சிறியதொரு விடயத்தையும், பெரிது படுத்தி எழுதி, காலங்காலமாக விடும் தவறை நாங்களும் விடக்கூடாது. சாதகமாக இல்லாத செய்திகளை எதோ சாதித்து விட்டது போல் எழுதுவது தவறு. உண்மையை எழுத வேண்டும். அரசியல் கட்சிகளின் சொல்லும், செயலும் வேறாகச் செயற்படுவதை புரியும் வகையில் மக்கள் தம் கடமையை உணரும் வகையில் எழுதவேண்டும்.”- இவ்வாறு முழக்கம் “திரு” தன் கருத்தைத் தெரிவித்தார். 

“கனடாவில் மக்கன்சி சட்டம்  (Magnitsky Sanction) சரியாகப் பயன்படுத்தப் படவில்லை. காரணம் ஸ்ரீலங்காவின் போர்க்குற்றவாளிகளிற்கு பயணத்தடை விதிக்கவில்லை என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும். அதேவேளை தூதரக அதிகாரி நியமனத்தை கனடா நிராகரித்ததானது “ஸ்ரீ லங்காவின் இனவழிப்பின் உளவியல் தாக்கத்திற்குள் இன்றும் சிக்கித்தவிக்கும் தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச ஆறுதல் தருகின்றது.”; தேசப்பற்றாளர் – ஞானம் அன்ரனி 


கனடாவின் மக்கன்சி பொறிமுறையும்                                                 கனடா அரசின் நடைமுறையும்

உண்மையில் Magnitsky Sanction என்றழைக்கப்படும் தடைச் சட்டத்திற்கான முன்மாதிரிச் சட்டம் 2012ம் ஆண்டு அமெரிக்காவில் நிறைவேற்றப்பபட்டிருந்தது. ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டு 2009ம் ஆண்டு இறந்த ளுநசபநi ஆயபnவைளமல என்ற  சட்டத்தரணியின் மரணத்தில் சம்பந்தப்பட்டிருந்தவர்களது சொத்துக்களை அமெரிக்காவில் பறிமுதல் செய்வதற்காக இச்சட்டம் அங்கு கொண்டுவரப்பட்டது.  


கனடாவில்  (Magnitsky Sanction) என்றழைக்கப்படும் தடைச் சட்டம், கனடாவின் எதிர்க் கட்சியான கொன்சவேடிவ் கட்சியினரால் முன்மொழியப்பட்டு, இன்றைய கனடா அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகும். உலகின் எப்பாகத்திலும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை இனங்கண்டு, அவர்கள் மீது  தனிப்பட்ட வகையில் குறிவைத்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க இச் சட்டம் வழி செய்கிறது. மனித உரிமை மீறல்கள், ஊழல் குற்றங்கள் என்பவற்றில் சம்பந்தப்பட்ட எவராயினும் இச்சட்டத்தின்கீழ் கனடாவில் கடும் நடவடிக்கைக்கு உள்ளாவர். அவர்களது சொத்துக்கள் கனடாவில் இருக்குமாயின் அவை பறிமுதல் செய்யப்படும். அவர்களுக்கு கனடாவிற்கு பயணம் செய்யும் உரிமை மறுக்கப்படும். அதன் மூலம் அவர்கள் தம் சொந்த நாட்டில் முடங்க நிர்ப்பந்திக்கப்படுவர்.


இந்த சட்டம்  முதலில் கனடாவின் செனட் சபையில் கொன்சவேடிவ் செனட்டர்களால்  முன்மொழியப்பட்டு செனட்சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன்பின் கனடாப் பாராளுமன்றத்தில்  டீடைட ளு-226 – ஆயபnவைளமல ளுயnஉவழைn என்ற பெயரில் கனடாவின் தற்போதைய லிபரல் அரசாங்கத்தினால் சற்றுத் தயக்கத்தின் பின்னர் சட்டமாக்கப்பட்டது. 


“இந்தச் சட்டம் ஒரு கருவியாகும். மனித உரிமைகளை கொடூரமாக மீறியவர்களுக்கு எதிராக இந்தக் கருவியை கனடாவின் தற்போதைய அரசாங்கம் பிரயோகிக்க வேண்டும். யுத்தம் முடிந்து கொண்டிருந்த காலத்தில் செய்யப்பட்ட மனிதஉரிமை மீறல்களுக்கு  பொறுப்புக் கூறும் வகையில் அதுஅமைய வேண்டும். கனடா மட்டுமல்ல, கனடாவின் நட்பு நாடுகளையும் இந்த நடவடிக்கையில் இணைக்க முடியும்.”  கொன்சவேடிவ் கட்சியினரின் நிழல் அமைச்சரவையின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சர் கார்நற் ஜீனியஸ் (புயசநெவவ புநரெளை) 


“ஸ்ரீ லங்காவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் உட்பட பலவிடயங்களை  தற்போதைய கனடா அரசாங்கம் அதிகமாகக் கவனத்தில் கொள்வதில்லையே.. ”  என 2018 நவம்பரில் கார்நற் ஜீனியஸ்   அவர்களிடம் நேர்காணலை  செய்த ராகவன் பரஞ்சோதி வினவியபோது அதை ஏற்றுக் கொண்டதோடு “கடந்த தேர்தலில்  ஸ்ரீ லங்கா அரசாங்கத்திற்கு எதிரான பலநடவடிக்கைகளை எடுப்போம் என சொல்லியிருந்தாலும் தற்போதைய அரசாங்கம் அதில் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை… இது மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட பொதுவிடயம்” என்றும் கார்நற் ஜீனியஸ் கூறினார். 


கனடாவின் எதிர்க்கட்சியினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு;, கனடா ஆளும் கட்சியால் நிறைவேற்றப்பட்ட மக்கன்சி சட்டம் குறிப்பிட்ட சில நாடுகளிற்கு எதிராக ஏற்கனவே பாய்ந்திருக்கிறது. சவூதி அரேபியா உட்பட வேறுசில நாடுகளுக்கு எதிராக பிரயோக்கிக்கப்படும் நிலைமையிலும் இருக்கிறது. அதேபோல இச்சட்டம் தமிழினத்திற்கு எதிராக இனப்படுகொலையை செய்தவர்கள் மீது பாயும் நிலைமை ஏற்பட வேண்டும் என்ற கார்நற் ஜீனியஸ்  அவர்களின் வேண்டுகோள் தற்போது மற்றவர்களாலும் பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றது. 

மாலைகளும், மயக்கங்களும்

ஈழத்தமிழர்கள் அதிகமாக வதியும் ரொரன்டோ பெரும்பாகத்தை பிரதிநித்துவப்படுத்தும் ஆளும் கட்சி அரச பாராளுமன்ற உறுப்பினர்களை தங்கள்    நிகழ்வுகளுக்கு அழைத்து மாலை அணிவித்து அழகு பார்த்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து,  பிரதமருடன் தாங்கள் எல்லோரும் நெருக்கமானவர்கள் போல் படம் எடுத்து மயங்கும் நம் சமூகம் ஒன்றை அறிவது மிக முக்கியம்.  மரபுத் திங்களைத் தந்துவிட்டார்கள் என்று மயக்கத்தில் எம் உரிமைக்கான போராட்டத்தைக் கைவிட்டு விடக்கூடாது. 

“அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் தமிழரைக் கௌரவப்படுத்துவது போல்; தோன்றினாலும், நமது உண்மையான தேவைகளைப் பொறுத்தமட்டில் ஆடைகளை இழந்து  தலைப்பாகை கட்டிவிட்ட நிலையிலேயே நம்மை விட்டிருக்கின்றார்கள்.” 

இனியும்  உணரச்சிவசப்பட்டு வெற்றுக் காசோலைகளில் கையெழுத்து இடுபவர்களாக நாம் இருக்கக்கூடாது.

அறவழியில் சட்டரீதியான போராட்டத்தில், இவ் இக்கட்டான சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றுபட்ட ஒரு தேசிய இனமாக எழுச்சி பெற்று இதற்காகக் குரல் கொடுக்கவேண்டும். 

இந்நிலை மாறவேண்டும். தொடர்ந்து போர்குற்றவாளிகளுக்கான மக்கன்சி சட்டத்திற்கு அமைய பயணத் தடையை கனடா அரசு பாயவிடவேண்டும். 

இனவழிப்பு கல்வி வாரத்திற்கு (104 சட்ட வரைபு)  எதிராக ஒன்ராறியோ மாகாண அரசின் மேல் பிரயோகிக்கும் அழுத்தத்தை, நடுவண் அரசு கைவிட வேண்டும். 

பர்மாவுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் அவையில் கனடா அரசு இனவழிப்பு தொடர்பான பின்புல நடிவடிக்கை போல ஈழத் தமிழருக்கு ஆதரவான நிலைப்பாட்டை கனடா அரசு எடுக்கும் போது தான் நமது அரசின் மீது தமிழருக்கு இருக்கும் ஐயம் விலகும். தமிழரையும் தம் குடிமக்களாக கருதுகிறது என்ற நம்பிக்கை பிறக்கும்

இத்தகைய இறுக்கமான ஆதரவைத்தான் நாம் கனேடிய அரசுக்கு வழங்கவேண்டுமே தவிர, வாக்குகளை வாரி வழங்கிவிட்டு வாயைப் பார்த்த வண்ணம் இனியும் இருக்கக்கூடாது.


எமது கடமையை முழுமையாகச் செய்வதற்கு,  இராணுவ ஒழுங்கு முறைபோல் சீராக நிறைவேற்றுவதற்கு, முழுமையாக தர்மத்தின் மீது நம்பிக்கை வைத்து நேர்மையுடனும் இதய சுத்தியுடனும்  செயற்படுவோமாக! ஒற்றுமை ஓங்குக! வாழ்க தமிழ்! 

No comments:

      முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர்..!             முகுந்தமுரளி உலகப் பொதுப் புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். 1.1....