Thursday, 11 June 2009

உலக மொழிகளில் தமிழுக்கு 15 வது இடம்






உலகில் இன்று பேசும் மொழிகளில் பழமைவாய்ந்த தமிழ் மொழி 15 வது இடத்தில் இருப்பதாக மனித உரிமைகளுக்கான தமிழ் நிலையம் தெரிவித்துள்ளது.


மேலும், உலகில் இன்று 6 ஆயிரத்து 800 மொழிகள் புழக்கத்தில் உள்ளன. அதில், 2 ஆயிரத்து 261 மொழிகள் எழுத்துருவை பெற்றுள்ளன. ஏனைய மொழிகள் பேச்சு வழக்கில் மாத்திரமே உள்ளன.


1996 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேச மொழியுரிமை பிரகடனத்தின் படி ஒரு மொழியின் வரலாற்றுத்தன்மை, அதன் எல்லை, அங்கீகரிப்பு, போற்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மொழிகள் தரப்படுத்தப்படுகின்றன. ஆசியாவில் மாத்திரம் 2 ஆயிரத்து 200 மொழிகள் பேசப்படுகின்றன. ஆபிரிக்காவில் 2 ஆயிரம் மொழிகளும், பசுபிக் பிராந்தியத்தில் ஆயிரத்து 300 மொழிகளும், ஐரோப்பாவில் 230 மொழிகளும் பேசப்படுகின்றன.


இந்தநிலையில், உலகில் வாழும் மொழிகள் என்ற அடிப்படையில் பார்க்கும்போது தமிழ் மொழி 15 வது இடத்தை பிடித்துள்ளது. மலேசியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, மொரீஷியஸ், தென்னிந்தியா, இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதி, மற்றும் 1862 ம் ஆண்டு பிரிட்டன் காலணித்துவத்தைக் கொண்ட இலங்கையின் மலைநாட்டுப்பகுதி என்பவற்றில் தமிழ் மொழி புழக்கத்தில் உள்ளது.


தமிழ் மொழிக்கு வரலாற்று சான்றுகள் உள்ளன. போர்த்துக்கல், நெதர்லாந்து ஐக்கிய இராச்சியம் போன்ற இடங்களில், இதற்கான சான்றுகள் உள்ளன. இவற்றை 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூலகத்தை எரித்ததை போன்று நாசமாக்கமுடியாது என மனித உரிமைகளுக்கான தமிழ் நிலையம் குறிப்பிட்டுள்ளது.



ஆயிரம் இருந்தும் என்ன அதர்மம் அழிக்கின்றது தர்மத்தை!
உலகம் கண்மூடி நடிக்கின்றது! - உலக அமைதி பேணும் சபையோ வாய்மூடி நடக்கின்றது.
மௌனத்தால் அமைதி பிறக்கும் என்றால் அது மயான அமைதியாகத் தானிருக்கும்!
மன்னிக்கத் தெரிந்தவன் மனிதன் ! நடந்தவை யாவையும் நாம் மன்னிப்போம்!வலிகள் இருக்கின்றது இதயம் அழுகின்றது ஆனால் பழிவாங்கும் எண்ணமில்லை.அறமே வெல்லும் எனும் நம்பிக்கையுடன்தொடர்ந்து போராடுவோம் தாயகக் கனவுகளுடன்….கடந்த கால் வரலாற்றில் தமிழர் எடுத்த அகிம்சையும் ஆய்தமும் தோற்றது ; தந்திர நகர்வு இது!ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன். இருந்தால் புரிந்துகொள்ளுங்கள்பகுத்தறிவு இருந்தால் பகுத்றிந்து கொள்ளுங்கள்பிரித்தாளமுற்படும் பிரிவினைவாதிகளின் முன்னால்பிரிந்துபோகாமல் ஒன்றிணைந்து உரத்துடன் போராடிஇழந்த மண்ணையும் மனிதத்தையும் ஒருசேர வென்றெடுப்போம்!தியாகங்கள் வீண்போவதில்லை…….துரோகங்கள் காலத்தால் வெல்லப்படும்….முhனத்தால் உயர்ந்தவர்கள் நாம் ஈனப்பிறவிகளை மன்னிப்போம்….காலம் அவர்களைக் கண்டு கொள்ளும்!வரலாறு அவர்களைக் காட்டிக் கொள்ளும்! ராஜதந்திரம் ஒன்று உண்டு எனப் புரிந்து கொண்டு மறைந்தும் மறையாமல் எங்கள் இதயமெல்லாம் ஒளிவிளக்காய் திகழும் ராஜகோபுரத்தின் நிழல் வழி தொடர்வோம்! எம் உரிமையை மீட்டெடுப்போம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.



No comments:

      முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர்..!             முகுந்தமுரளி உலகப் பொதுப் புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். 1.1....