நியாயமான கேள்வி!
- இயந்திர வெடிபொருட்கள் போட்ட சல்லடைகள் மத்தியிலும் இதயம் வெடிக்காமல் மனிதாபிமானத்திற்காய் காத்திருக்கும் எங்கள் எதிர்காலம் கேள்விக்குறிதானோ?
- வேதவிதிகளின் படி அக்கிரமக்காரர் 6 வகையினர்
- (1) விசம் கொடுத்தவா
- (2) வீட்டிற்கு நெருப்புவைத்தவர்
- (3) பயங்கர ஆயுதங்களால் தாக்குபவர்
- (4) செல்வத்தைக் கொள்ளையடிப்பவர்
- (5) பிறர் நிலத்தை ஆக்கிரமிப்பவர் (6) மனைவியைக் கடத்திச்சென்றவர் இந்த அக்கிரமக்காரர்களை உடனே கொல்லலாம். இவர்களைக் கொல்வதால் பாவம் ஏதும் கிடையாது.
- (1) எங்களைக் கொல்வதற்கு வான்வெளியில் இருந்து விசக்குண்டுகள் வீசினர்!
- (2) எங்கள் குடில்களுக்கு தீவைத்தனர்..தேவாலயத்தை கொழுத்தினர்..கோவிலில் பூசாரியை பூட்டிவைத்து எரித்தனர் அதுமட்டுமா அறிவின் களசிஞ்யத்தை (யாழ்நூலகம்) தீவைத்துக் கொழுத்தினர்.
- (3) வீதியில் எம்மை தெருநாய்போல் சுட்டு வீசினர் .
- (4) எங்கள் வளங்கள் மானம்.கற்பு, "ஐயோ! கண்முன்னால் அத்தனையும் கொள்ளை கொண்டு போயினர்...
வடக்கு கிழக்குப் பகுதிகளில் உரியவர்களால் பராமரிக்கப்படாமலிருக்கும் வங்கிக் கணக்குகளை அரசுடைமையாக்கும் நடவடிக்கைகளை இலங்கை வங்கி ஆரம்பித்துள்ளது. யாழ்.குடாநாட்டில் இந்த நடவடிக்கையை இலங்கை வங்கி ஆரம்பித்திருப்பதன் மூலம் குடா நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களிலும் வெளிநாடுகளிலும் வாழும் பல்லாயிரக் கணக்கானோரின் பல கோடி ரூபா வைப்பு அரசுடைமையாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டில் இதன் முதற்கட்டமாக அதி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மயிலிட்டி காசநோய் ஆஸ்பத்திரி வளவிலுள்ள கோயிலின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு அரசுடைமையாக்கப் போவதாக இலங்கை வங்கி தெரிவித்துள்ளது. வடக்குஇ கிழக்கில் பராமரிக்கப்படாதிருக்கும் வங்கிக் கணக்குகளையும் பாதுகாப்பு பெட்டகங்களிலிருக்கும் பணம் மற்றும் நகைகளையும் அரசுடைமையாக்கப் போவதாக மத்திய வங்கி அறிவித்திருந்தது. இதன் முதற்கட்டமாகவே மயிலிட்டி கோயில் கணக்குகளை முடக்கப் போவதாக இலங்கை வங்கி அறிவித்துள்ளது.
(5) எங்கள் பாடசாலை நிலங்களையும் பறித்தெடுத்தனர்...பரந்த தேசமெங்கும் தம்பிள்ளைகளின் எதிர்காலத்திறகாய் புலம் பெயர்ந்தது தேசத்தின் உறவுகள்...ஆனால் நாங்கள் இன்றும் படிக்கின்றோம். வானம் கூரையாக வான்போட்ட குண்டின் கோது தளபாடமாக....நாளைய தேசத்திற்காய் இன்றும் படிக்கின்றோம்...மேலும் சிலபுகைப்படங்களை அல்பத்தில் (அதுசரி அல்பத்துக்கு என்ன தமிழ்)பாருங்கள்.15ஃ7ஃ2006. இது கண்டும் உலகத்தின் மனிதாபிமானம் அகதியாய் வா ஏற்றுக்கொள்கின்றேன் என்று மட்டும் ஏற்றுக்கொள்கின்றது.... ளுசi டுயமெயn சநகரபநநள in ஐனெயை ஆனால் எம்மைக்காப்பவரைமட்டும் பயங்கரவாதியாய் பட்டம் சூட்டி நிற்கின்றது. (6) ஐயகோ! கட்டிய மனைவியை கண்ணின் முன்னால் கற்பழித்ததையும், பெற்ற அன்னையை ஐயோ வேண்டாம் வேண்டாம்... நாங்கள் பட்ட அவலங்கள் நாங்கள்தான் அறிவோம்." "உண்மைகள் உறங்குவதுமில்லை, ஊமையாகிப்போவதுமில்லை" சிங்கள் மக்களை நாங்கள் நேசிக்கின்றோம்...பாவம் அவர்களுக்குத் தெரியுமா அரசும் அரசஇயந்திரமும் போடும் வேசங்கள்...( ஏன் இன்று உலகம் கண்மூடி ஆடுவதும் கபட நாடகம்தானே! தர்மத்தின் வாழ்வு தன்னைச் சூதுகவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்!) ஆயிரம் இருந்தாலும் அநியாயமாய்ச் சாவது அப்பாவிகள்...சூத்திரதாரிகள் யார்? அரசபடைகள் அப்பாவிமக்களைக் கொல்வது உலகத்தின் கண்ணில் பயங்கரமாய்ப் படுவதில்லை. ஆனால் தர்மத்தின் கண்ணில் நியாயம்????ஆயிரம் இருந்தாலும் அநியாயமாய்ச் சாவது அப்பாவிகள்...சூத்திரதாரிகள் யார்? அரசபடைகள் அப்பாவிமக்களைக் கொல்வது உலகத்தின் கண்ணில் பயங்கரமாய்ப் படுவதில்லை. ஆனால் தர்மத்தின் கண்ணில் நியாயம்????
தன்னைக் கொல்ல வரும் பசுவையும் கொல்லலாம் என்கின்றது தர்மம். "சிறுவர் உரிமையைக் காப்போம் என்று குரல் கொடுக்கும் உலகமே அவர்களின் உயிர்களை காக்க வழி செய்வீர் என்றால் உங்கள் பார்வையில் ஒரு பயங்கரவாதி உருவாகமாட்டான்." அதுசரி உண்மையில் மனிதாபிமானம் என்றால் என்ன? தேசத்தின் தலைவர்களின் கட்டளையை விசுவாசமாய் நிறைவேற்றும் இராணுவவீரர்கள் பாவம்....மனிதாபிமானம் காட்டுங்கள்..ஏனென்றால் அவர்கள் ழூழூழூ"காவல்நாய்யகர்கள்". ழூழூழூதப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள்...அவர்கள் விசுவாசத்திற்காகத்தான் அப்படிய்ய் எழுதினேன். ஏதோ உங்கள் பார்வையில் எப்படிய்ய் படுகின்றதோ...ஆப்படிய் எடுத்துக்கொள்ளுங்கள். மனதில் பட்டது பட்டபடி எழுதினேன். விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன..உலகத்தமிழ் உறவுகளிடமிருந்து....-முரளி.கந்தசுவாமி-
இதனை எழுதத்தூண்டிய செய்தி கீழேயுள்ளது."இது நியாயமான கேள்வி."
Saturday 15 July 2006
தமிழீழ நீதிமன்றத்தின் பிரகாரம் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் சிறிலங்கா பொலிஸ் கான்ஸ்டபிளை விடுதலைப்புலிகள் விடுவிக்கப்பட வேண்டும் என சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவூடாக சிறிலங்கா சமாதான செயலகத்தினால் இந்தக் கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மன்னார் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் உள்நுழைந்த மூன்று சிறிலங்கா பொலிஸ் கான்டபிள்கள் விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தமிழீழ காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் தமிழீழ நீதிமன்றில் முன்நிறுத்தப்பட்டு பின்னர் வழக்கு விசாரணைகள் இடம் பெற்றதுடன்இ விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். எனினும், ஜெனீவா முதல் சுற்றுப் பேச்சுக்கு முன்னராக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் அவர்கள் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களுடன் கிளிநொச்சியில் நடைபெற்ற சந்திப்பைத் தொடந்து நல்லெண்ண அடிப்படையாக மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களில் ஒருவரை விடுவிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் விடுவிக்கப்பட்டார். பின்னர் தமிழீழ நீதிமன்றத்தினர் மற்றொரு பொலிஸ் கான்ஸ்டபிள் விடுவிக்கப்பட்டார். மூன்றாம் நபர் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிறிலங்கா அரசு குறிப்பிட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை விடுக்குமாறு விடுதலைப்புலிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து செயற்படும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தினர் குறிப்பிட்ட பொலிஸ் கான்ஸ்டபிளின் படம் மற்றும் அவரது குடும்பத்தவரின் கருத்தினையும் ஒலிபரப்பி அனுதாப சூழலை வெளிப்படுத்தியதையும் கவனிக்கப்பட வேண்டிய விடயம்.
ஆனால் மனிதாபிமானம் பற்றிப் பேசும் சிறிலங்கா அரசு மனிதாபிமானத்துடன் குறிப்பிட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை விடுவிக்கக்கோரும் சிறிலங்கா அரசுக்கு மனிதாபிமானம் இருக்கிறதா?
தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இற்றவரை தமிழினம் மீது மனிதாபிமானமாகச் சிங்களம் நடந்து கொள்கிறதா? பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி காலம் சென்ற ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்கள் கடந்த 1979 ஆம் ஆண்டு யூலை 20 ஆம் திகதி அமுல்படுத்தினர். இந்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். வகை தொகையற்ற கைதுகளால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பூசாஇ களுத்துறைஇ வெலிக்கடை வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதைப்படுத்தப்பட்டனர். பல வருட காலமாக நீதி விசாரணைகள் இன்றி முகாம்களுக்குள் அவர்களது வாழ்க்கை சீரழிக்கப்பட்டது. இன்று வரை சுமார் ஆயிரம் இளைஞர்கள் வரை இவ்வாறு துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை நீதி விசாரணையின் முன் நிறுத்தி விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எந்தவொரு சிங்கள இனவாத அரசுகளும் மேற்கொள்ளவில்லை. உண்மையில் மனிதாபிமானம் உள்ள அரசாகவிருந்தால் இவ்விடயத்தில் எவ்வளவு இதயசுத்தியுடன் செயற்பட்டிருக்க முடியும். அதே வேளை வெலிக்கந்தைப் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினரின் ஒத்துழைப்புடன் ஆயுதக்குழுக்களால் கைது செய்யப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக்கழக பணியாளர்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பது குறித்து இதுவரை எதுவித தகவலுமில்லை. இவர்களை விடுவிப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் சிறிலங்கா அரசு மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் விடுதலைப்புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளை மட்டும் விடுவிப்பதில் காட்டும் அக்கறை ஈடுபாட்டை பல வருடமாக சிறைக்கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை இல்லாமல் பெரும் துன்பப்படும் தமிழ் இளைஞர்களின் விடுதலையில் காட்டியிருக்கலாமல்லவா?
( பற்றி ஈழநாதன்- நன்றி தமிழோசை)
"தர்மம் வெல்லும்" நம்புவோம் தமிழீழம் நாளை மலரும். உலகம் வெகுவிரைவில் உண்மையைத் தரிசிக்கும் " புலிகளின் தாகமல்ல தமிழீழத்தாயகம் ...தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்." ஐக்கிய இலங்கையினுள் தமிழீழத் தாயகம் அங்கீகரிக்கப்படவிட்டால்(இந்தியாவில் தமிழ்நாடுபோல்இ அல்லது கனடிய ஆட்சிமுறையைப்போல்......... பேச்சுவார்த்தை மூலம் (கியூபெக்மாநிலம்போல்) ஓர் ஆட்சிமுறை மலருமா? சமாதானம் கிடைக்குமா?அழகியதீவில் அமைதி திரும்புமா? பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் 2016 இல் இன்னும் 10 வருடப்பகடையாடலில் பாரறியத் தமிழீழம் மலரும். (சோதிடப்படி கல்வெட்டு ஆதாரங்கள்படி முற்கூறல்.) கீதையைப் படிக்கின்றேன். தர்மம் புரிகின்றது . கடமையைச் செய்கின்றேன் பலன் எதுவாயினும் பகவானுக்கே சமர்ப்பணம்.
இக்கட்டுரை அன்றைய மனோநிலையில் எழுதியது. இன்று மிகவிரிவாக ஆய்ந்து எழுதவேண்டிய சூழ்நிலை ... எனவே இனிவரும் விடயங்கள் ஆதாரபூர்வமான வரலாற்றுத்தகவல்களுடன் நியாயமான கேள்விகளுடன் தொடரும்....
பணியில் அன்புடன் முகுந்தமுரளி
No comments:
Post a Comment