Saturday, 18 April 2009

Tamil Eelam National Flag!

                                                             
                                              


எமது தேசியக்கொடியை மஞ்சள், சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் அழகுபடுத்துகின்றன. தனிப்பாங்கான தேசிய இனமான தமிழீழத் தேசிய இனம் தனது சொந்த மண்ணில் தன்னாட்சி அமைத்துக்கொள்ள விளைவது அதனது அடிப்படை அரசியல் உரிமையும் மனித உரிமையுமாகும். தமிழீழ மக்கள் நடத்துகின்ற தேசிய விடுதலைப் போராட்டம் அறத்தின்பாற்பட்டது, நியாயமானது என்பதையும் தமிழீழத்தேசம் எப்பொழுதும் அறத்தின் பக்கம் நிற்குமென்பதையும் மஞ்சள் நிறம் குறித்து நிற்கிறது. 
தேசிய விடுதலை பெற்ற தமிழீழத் தனியரசை அமைத்துவிடுவதால் மட்டும் முழுமையான விடுதலையைப் பெற்றுவிட்டதாகக் கொள்ளமுடியாது. தமிழீழக் சமுதாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படவேண்டும். சாதிய, வகுப்பு முரண்பாடுகள் அகற்றப்படவேண்டும். பெண்ணடிமைத்தனம் நீக்கப்படவேண்டும். இதற்குக் சமுதாய அமைப்பிற் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். சுமத்துவமும், சமதருமமும் சமுதாய நீதியும் நிலைநாட்டப்படவேண்டும். இத்தகைய புரட்சிகரமான சமுதாயமாற்றத்தை வேண்டிநிற்கும் எமது அரசியல் இலக்கைச் சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது. 
விடுதலைப்பாதை கரடுமுரடானது சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்தது. இவற்றைத் தாங்கிக் கொள்ளவும் விடுதலையடைந்தபின் ஏற்படப்போகும் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு தேசத்தைக்கட்டியெழுப்பவும் பாதுகாக்கவும் உருக்குப் போன்ற உறுதியான உள்ளம் வேண்டும்; அசையாத நம்பிக்கை வேண்டும்; தளராத உறுதி வேண்டும். இவற்றைக் கறுப்பு நிறம் குறித்துக் காட்டுகின்றது. 
விடுதலை அமைப்பும் மக்களும் தலைவர்களும் தூய்மையையும் நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை வெள்ளை நிறம் குறித்து நிற்கிறது.  

தாயகப்பற்றுடைய தமிழீழக் குடியுரிமையாளர் எவரும் தமது வீட்டுக்கு முன்னாலோ வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றிலோ இந்தக்கொடியைப் பறக்கவிடலாம். 

உலகில் இந்தக் கொடியை நாங்கள் ஏற்ற , போற்ற எவனும் தடையாக நிற்க முடியாது. அதிகம் எழுத விரும்பவில்லை... இன்று முதல் உலகவரலாற்றின் தமிழர்கள் எழுச்சியின் ஒரு பக்கமாக எனது வீட்டின் முகப்பிலும் தேசியக் கொடியை 24 மணிநேரமும் பட்டொளி வீசிப் பறக்கவிட்டிருக்கின்றேன்,. 

இலங்கையில் நடக்கின்ற இனப்படுகொலைகளை நிறுத்த தமிழீழம் தவிர வெறொரு தீர்வும் முடிந்த முடிவாக மாட்டாது. எங்கள் ஆட்சியுரிமையை எங்கள் வாழ்வுரிமையை நாங்கள் மீளப்பெற்றுக் கொள்ளவதே உறுதியான இறுதியான ஒரு தீர்வைத் தரும் தமிழீழம் காலத்தின் கட்டாயம் எனநம்பும் அனைத்துத் தமிழ்மகனும் தங்கள் இதயங்களில்  மட்டுமல்லாது இல்லங்களின் வாசல்களிலும் ஏற்றிவைத்தும் எங்கள் உறுதியை உலகுக்கு எடுத்துக்காட்டி ப்போராடுவோமாக! 

இங்கு கனடாவில் எங்கள் இளையோர் தங்கள் வாகனங்களில் பட்டொளி வீசி எமது தேசியக் கொடியைப் பறக்க விட்டுக் கொண்டு திரிகின்றார்கள். அதுபோல் எங்கள் வாழ்விடங்களும் எங்கள் உணர்வுகளைப் பிரதிபலிக்கட்டும்.

    

We judge that the struggle for Tamil Eelam has justice on its side and that... by so judging, and by placing in the public domain the facts on which that judgment is founded,  we are more likely to bring a just peace in the island of Sri Lanka, than by remaining a passive spectator. 

No comments:

      முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர்..!             முகுந்தமுரளி உலகப் பொதுப் புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். 1.1....