



ஓநாயுடன் கூட்டுவைத்திருக்கும் குள்ளநரி நீங்கள் என்பது சரித்திரம் எமக்குக் கற்பித்த பாடம்!
வறுமைக்கோட்டில் மக்களை வைத்திருந்தால்தான், உங்கள் வாக்குப்பெட்டி நிறையுமென்று நீங்கள் வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டி கொடுத்து உங்கள் வம்சத்திற்கே சொத்துச் சேர்த்தது வரலாறு எமக்கு புகட்டிய பாடம்!
பொங்கு தமிழுக்கு இன்னல் விளைந்தால் சங்கே முழங்கு என்று பாவேந்தன் பாடியபாடல் , தமிழக மக்களின் மூச்சுக் காற்றோடு கலந்திருக்கு! எங்கள் தமிழகமே! எங்கள் தொப்புள் கொடி உறவுகளே எமக்குப் பலம்.....
அவர்களை நீங்கள் இனியும் ஏமாற்றி உங்கள் வாக்குப் பெட்டகத்தை நிரப்பமுடியாது.
தமிழால் நீங்கள் வாழ்ந்தீர்கள்! தமிழை நீங்கள் வாழவைக்கவில்லை. தமிழரை அழிக்கும் இத்தாலிப்பேயுடன் கூட்டுச்சேர்ந்து நீலிக்கண்ணீர் வடிக்கின்ற முத(லை)ல்வர் நீங்கள்!
உங்கள் வயதுக்கும்! தமிழகத்தின் முதல்வர் எனும் உயர்வுக்கும் மற்றும் உங்கள் தமிழ் எழுத்துக்களுக்கும் மட்டுமே உங்கள் மேல் நாங்கள் மரியாதை காட்டுகின்றோம். அல்லாவிட்டால் (நீ)ங்கள் என்றே விழித்திருப்போம். இன்னும் காலம் தாழவில்லை... எம்மை பேரழிவில் இருந்து காப்பாற்ற உண்மையில் நீங்கள் ஈழத்தமிழரை வாழவைக்கவிரும்பினால் சதிகார இந்திய காங்கிரசுடன் கூட்டுச்சேருவதை நிறுத்தி உடனும் பதிவிகளைவிட்டு விலகி, உயிராக தீப்பிழம்பாக திரண்டு எழும் எங்கள் தமிழக உறவுகளை நம்பினால் நாங்களும் பேரழிவில் இருந்து காப்பாற்பபடுவோம். ஏழரைக்கோடித் தமிழர்களின் வாக்குகளும் உங்கள் வாக்குப்பெட்டிகளை நிரப்பும் நீங்கள் சரித்திரம் படைத்த உலகத்தமிழராய் மரணத்தின்போதும் மகுடத்துடனும் மங்காப்புகழுடனும் வானுலகம் சென்ற பின்பும் வாழ்த்திப்பாடும் பெரும்பேறுபெறுவீர்கள்!
இல்லயேல் சரித்திரமே உம்மைத் தரித்திம் பிடித்தவன் எனத் தூற்றிப்பேசும் வரலாற்றுப் பதிவின் தமிழுக்குக் கிடைத் தரித்திர முதல்வன் எனும் பதிவும், எங்கள் மக்களின் மரண-சாபமும் உங்கள் சந்ததியையே அழிக்கும்!
'சூரியனை விட மேகங்கள் சக்தி வாய்ந்தவையும் அல்ல, நீடித்தவையுமல்ல. மேகங்கள் எவ்வளவு பெரியவையாய் இருந்தாலும், அவற்றால் சூரியனை அடியோடு மறைத்து விட முடியாது. இதைப் போன்றுதான் ஒரு நல்ல மனிதனைத் தலைதூக்க விடாமல் செய்யும் கயவர் கூட்டத்தின் முயற்சியும்!" - தாகூர்
அதேபோல் எங்கள் தேசமும் எங்கள் தேசியத்தலைவரும் தர்மமும் நியாயமும் எங்கள் பக்கம் இருக்கும் வரை எவரும் எம்மை எதுவும் செய்துவிட முடியாது எனும் நம்பிக்கை எமக்குண்டு. உலகிலுள்ள பத்துக்கோடித் தமிழரும் எங்கள் ஆணிவேர்கள்! சாகும் வரை நாமும் அகிம்சை வழியில் உலகப்பந்தெங்கும் போராடத் தொடங்கிவிட்டோம்!
கருணாநிதியே! கருணையற்ற சுயநலவாதியே! கருணையற்று நிதியை மட்டும் குறிவைத்து சுயநலமாய் காய்நகர்த்தும் அரசியல் நரியா நீங்கள் ... அல்லது தமிழர்மேல் பாசம் கொண்டு தமிழ்மானம் காக்கத் துணியும் கருணைக்கடலா நீங்கள் என்பதை காலம் கண்டு கொள்ளட்டும்.
No comments:
Post a Comment