



09-05-2009 அன்று 3000க்கு மேற்பட்ட தமிழ் பொதுமக்கள் இலங்கை இராணுவத்தின் ஏறிகணை தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதன் காரணமாக ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொதித்தெழுந்து 10-05-2009 ஆகிய இன்று Queens Park இல் ஒரு அவசர மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்காய் கூடினர். காலை 10 மணிக்கு அமைதியான முறையில் தொடங்கிய இவ்வார்ப்பாட்டத்தில் பெருமளிவிலான மக்கள் கலந்து கொண்டனர். ஒரு கவனஈர்ப்பு போராட்டமாக தொடங்கிய இவ்வார்ப்பாட்டம், மக்கள் வருகை அதிகரித்த பின்பு ஒரு வீதி மறியல் போராட்டமாக மாறியது.3:30 மணியளவில் ; Queens Park இல் இருந்து பெருந்திரலான மக்கள் வீதிகளில் இறங்கினர். இவர்கள் ரொறொன்ரோ பெரும்பாகத்திலுள்ள பல வீதிகளை மறித்தனர். மறியலின் பொழுது இவர்கள் பல கோசங்களை எழுப்பினர். இலங்கை அரசாங்கம் தனது இனப்படுகொலையை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அப்பாவி பொதுமக்களை கொல்வதை நிறுத்த வேண்டும் எனவும் உடனடி போர் நிறுத்தம் அவசியம் எனவும் மக்கள் கோசங்களை எழுப்பினர்.
நான்கு மணித்தியாலங்களுக்கு மேல் வீதிகளை மறித்ததைத் தொடர்ந்து தமிழ் மாணவரும் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தோரும் Gardiner Expressway பெரும் வீதியில் இறங்கி பெரும்வீதியின் இருபக்கத்திலும் அமர்ந்தனர். மக்களை அடக்குவதற்காக நூற்றுக்கணக்கான காவல்துறையினர் வந்தனர். கனடிய மண்ணில் முன்பு நடைபெறாத அளவில் இப்பொரும்வீதி மறிப்பு போராட்டம் அமைந்தது.
பெரும்வீதி மறியலின் பொழுது ரொறோன்ரோ பெரும்பாகத்தின் வீதிகளிலும் பெருமளவிலான மக்கள் வீதிமறிப்பு போராட்டத்தைத் தொடர்ந்த அதேவேளை பெரும் தொகையிலான தமிழ் மக்கள் Queens Park இலும் ஆர்ப்பாடத்தைத் தொடர்ந்தனர்.
இதனையே ஒரு பெரும்விடயமாகக் கவனத்தில் கொண்ட CP 24 Channel தொடர்ச்சியாகக்காட்டிக் கொண்டிருந்தது. இந்நடவடிக்கை சட்டத்தை மதிக்காத செயல் எனவும் மற்றும் பலவிதமான விமர்சனங்களுக்கு மத்தியில் மக்களின் இந்த எழுச்சிப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இலங்கையில் நடக்கும் தமிழினத்திற்கேதிரான இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்துமாறு பலமுறைகோரியும் பதில் கூறாது மௌனம் சாதிக்கும் ஆளும் காப்பரின் அரசாங்கத்திடம் இருந்து பதில் வரும்வரை தொடர்வதென திடமனத்துடன் 5000 முதல் 6000 வரையிலான தமிழ்மக்கள் குழந்தைகள் முதல் தாத்தா பாட்டி உட்பட பெருஞ்சாலையில் வழிமறுத்து இருந்தனர். அதேவேளை மிகத் தெளிவான பதில்களை இதை ஏற்பாடு செய்த மாணவர் சமூகத்தினர் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் வழங்கத் தொடங்கினர். ஈற்றில் கனடிய எதிர்க்கட்சிகளின் நிதானமான அணுகுமுறையினால் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் இதற்குமேல் பெருமவீதியை மறிப்பது அழகல்ல என திரும்பிய மக்கள் உண்ணாவிரதத்துடன் கூடிய எழுச்சிப்போராட்டம் நடக்கின்ற Queens Park பகுதியை நோக்கி மீண்டனர். அங்கும் இரவிரவாக மெழுகுதிரிகளுடன் மக்கள் பெருமளவில் திரண்டு நேற்றைய தாக்குதலில் இறந்துபொன 2000த்திற்கும் மேற்பட்ட மககளை எண்ணியும் மேலும் எதுவிதப்படுகொலைகள் தொடரும் முன் சர்வதேசசமூகம் ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்க்கோரியும் போராட்டம் தொடர்கின்றது.
இதேவேளை போரில் சிக்குண்டு தவிக்கும் மக்களுக்கு மருந்து உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காள நிதியினை சர்வதேசத்தமிழ் வானொலி மொன்றியல் மாநகரில் சனி காலை முதல் ஞாயிறு இரவு 9.00 மணிவரை நடாத்தி பெரு நிதி ஒன்றிறினைத் திரட்டிய பொழுது பெருமளவு மக்கள் வந்து தங்களது பங்களிப்பை மொன்றியல் மணில் செலுத்தினர். இந்த நிதிதிரட்டல் நடந்து கொண்டிருந்தபோது தாயகத்தில் இராண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்ட செய்தி வந்தது. தொடர்ந்தும் இந்தச் செய்தி உடனும் மக்ளுக்குத் தெரிவிக்கப்ட்டது. மொன்றியல் மண்ணிலும் மக்கள் தொடர்ந்தும் போரட்டம் நடந்து கொண்டிருக்கு அமெரிக்காவின் தூதராலயத்தி முன்பாகத் திரண்டு எழத் தொடங்யவணம் இருந்தனர். அந்தப்படங்களும் இங்கு இணைக்கப்ட்டுள்ளன்..
No comments:
Post a Comment